Saturday, September 4, 2004

பதில் கடிதம்.

கேள்வி பதில் பாணியில நம்ம பையன் குடுத்த காதல் கடிதத்துக்கு அந்த பொண்ணோட பதில் கடிதம்:
---------------------------------------------------------------

கீழே குடுத்திருக்கிற எல்லா கேள்விகளுக்கு உனக்கு சரின்னு படுற பதிலை செலக்ட் பண்ணு.

1) கிளாஸ்ல முதல் பெஞ்சுல யாராவது உக்காந்திருந்தா, உள்ளே வர்ரவங்க அவங்களை பார்கிறது சகஜம்
அ) ஆம்
ஆ) இல்லை

2) ஒரு பொண்ணு சிரிச்சுட்டு, ஒருத்தரை பார்த்த்தா அதுக்கு பேரு காதல்
அ) ஆம்
ஆ) இல்லை

3) பாட்டு பாடும் போது, திடீர்ன்னு பாட்டு வரி மறந்துபோயிட்டா, பாடுறவங்க பாடுறத பாதியில நிறுத்திருவாங்க
அ) ஆம்
ஆ) இல்லை

4) நான் என்னோட சின்ன வயசு போட்டோவை என்னோட நன்பர்கள்கிட்ட காமிச்சிட்டு இருக்கும்போது, நீ நடுவுல வந்து மூக்க நுழைச்சிட்ட
அ) ஆம்
ஆ) இல்லை

5) பிக்னிக்ல உன் கைய புடிச்சு மேடு ஏறுரத நான் தவிர்த்தேன். அது ஏன்னு உனக்கு இன்னும் புரியல
அ) ஆம்
ஆ) இல்லை

6) நான் என்னோட (பெண்)நண்பருக்காக பஸ்ஸ்டான்ட்ல காத்திட்டு இருக்ககூடாதா?
அ) ஆம்
ஆ) இல்லை

7) உன்னை நான் என்னோட அப்பாகிட்ட 'நண்பன்'னு அறிமுகப்படுத்த கூடாதா?
அ) ஆம்
ஆ) இல்லை

8)உனக்கு ரோஜா மட்டுமில்லை, தாமரை, மேஃப்ளவர், காலிப்ளவர், கூட புடிக்கும்னு சொன்னியே, அது உண்மை தானே?
அ) ஆம்
ஆ) இல்லை

9) ஓ! அன்னைக்கு உன் பிறந்த நாளா? அதுதான் உன்னை கோயில் பக்கம் பார்த்தேனா?. நான் தினமும் காலையில கோயிலுக்கு வருவேன், அது உனக்கு தெரியுமா?
அ) ஆம்
ஆ) இல்லை

மேல சொன்ன கேள்விகள்ல, ஒரு கேள்விக்காவது நீ 'ஆம்'னு சொல்லியிருந்தா "நான் உன்னை காதலிக்கலை"
மேல சொன்ன கேள்விகள்ல, ஒரு கேள்விக்காவது நீ 'இல்லை'னு சொல்லியிருந்தா "உனக்கு காதல்னா என்னன்னே தெரியலை"

--விஜி
------

பதில் கடிதத்தை படிச்சு பார்த்துட்டு நம்ம பையன் எதோ பேயடிச்ச மாதிரி சுத்திட்டு இருக்கான்.. பாவம்..!!

1 comment:

கலை said...

உங்களுடைய இந்த வலைப்பக்கத்திற்குள் தற்செயலாக வந்தேன். நகைச்சுவை கலந்த உங்களது எழுத்து நடை மிகவும் நன்றாக உள்ளது. முழுமையாக வாசிக்க நேரமில்லை. ஆனால் பின்னர் வாசிப்பேன். காதல் கடிதமும், பதில் கடிதமும் வாய்விட்டு சிரிக்க வைத்தது. வாழ்த்துக்கள் தொடருங்கள்.