Friday, March 18, 2005

9:30 to 10:00

ரொம்ப நாள் இடைவெளிக்கப்புறம் வசந்த், மறுபடியும் ஒரு படம் பண்ண போறாராமங்க, படத்தோட பேரு 9:30 to 10:00.
எனக்கு எப்பவுமே வசந்த் படங்கள் கொஞ்சம் அதிகமா புடிக்குமுங்க, 'நேருக்கு நேர்', 'பூவெல்லாம் கேட்டுப்பார்' மாதிரி படங்கள கூட ரசிச்சு பார்த்திருக்கேன்னா பாருங்களேன்.
ஆளும் ரொம்ப எளிமையான ஆளுங்க, சென்னைபட்டனத்துல இருந்தப்போ உதயம் தியேட்டர்ல 'தில்' படம் பார்க்கும் போது இண்ட்ரவெல்ல பார்த்து பேசியிருக்கனுங்க, சும்மா பெரிய ஆறிவுஜீவி மாதிரியெல்லாம் இல்லாம, நமக்கெல்லாம் புரியர மாதிரி பேசுனாருங்களா, அதுல கொஞ்சம் ஜாஸ்த்தி புடிச்சு போச்சுங்க.

என்னை பொறுத்த வரைக்கும் பாட்டுகள படமெடுக்கிறதில வசந்த் ரொம்ப ரசனையான ஆளுங்க, எனக்கென்னவோ எல்லா பாட்டையும் ரொம்ப ஆர்ப்பாடமா எடுக்கிற ஷங்கர் மாதிரி ஆளுகளை விட வசந்த் எடுக்கிற விதம் ரொம்ப புடிக்குதுங்க. சப்பை படமான 'நேருக்குநேர்'ல கூட அந்த கொல்கத்தா ரோட்டுல சூர்யா (பாவமா முஞ்சிய வச்சுகிட்டு) சிம்ரன துரத்திட்டு பின்னாடியே ஓடுறது ரொம்ப அழகா இருந்துச்சுங்க.
அதே மாதிரித்தான் 'நிவேதா' பாட்டு. ஆனா நிறையா பேருக்கு அந்த பாட்டு புடிக்கலைங்க, என் சகா ஒருத்தன் நான் சொன்னேன்னு அந்த பாட்டை பார்த்துட்டு பாதியிலயே 'பாட்டு முடியறதுக்குள்ள கண்ணு பொத்து போகும் போல'ன்னு நக்கலா சொல்லிட்டு போயிட்டானுங்க, இருந்தாலும் நமக்கு புடிக்குது.. :-)

ஒரு ரெண்டு பேர் வாழ்க்கையில ஒரு அரை மணி நேரம் நடக்கிற விஷயத்தை மையமா வச்சு 9:30 to 10:00 படத்தை எடுக்கிறாரம். ம்ம்..ஏமாத்தமாட்டாருன்னு நம்புவோம், ஹீரொ நம்ம 'சூர்யா'.. அவர் காட்டுல ஏற்கனவே அடை மழை.. அது தொடரும்னு நம்புவோம்.
அய்யா வசந்த்.. சூர்யா எல்லாம் வச்சுகிட்டு மறுபடியும் தேவாகிட்ட போயிடாதீங்க, ரஹ்மான் வெளியூர் போயிட்டாரு, சரி, நம்ம இளையராஜா இருக்காரு, என்னைக்கும் 'இளமை'யா, உங்களுக்கு அவர் தான் சரி.. (எங்களுக்கும் தான்). அப்படி இல்லைன்னா 'யுவன்', தயவு செஞ்சு தேவாகிட்ட போயிராதீங்க, அவர் எதாவது இங்கலீஸ் பாட்டு தான் போட்டுகுடுப்பாரு எப்படியும் :-(

அசோகமித்ரனடோட 'தண்ணீர்' நாவலா படமாக்கிட்டு இருக்கேன்னு சொல்லியிருகாருங்க, நமக்கு அது பத்தியெல்லாம் அதிகம் தெரியாதுங்க, தெரிஞ்சவங்க, யாராவது அதை பத்தி சொல்லுங்க..

No comments: