Wednesday, July 12, 2006

பாதுகாப்பு

உலகம் நொம்ப கெட்டுபோச்சுங்க, எங்க பார்த்தாலும் ஒரே கேப்மாரித்தனமா இருக்குங்க, 'இங்க எவனுக்கும் எதுக்கும் பாதுகாப்பு இல்லை'ன்னு குருதிப்புனல் கமல் மாதிரி கீச்சுன்னு கத்ததோணுதுங்க.
(ச்சே, சனிக்கிழமை சும்மாயிருக்காம 17 வது முறையா 'குருதிப்புனல்' பார்த்தது தப்பா போச்சு, எதுக்கெடுத்தாலும் அந்த பட வசனமே வருது)

ஒரு மனுசன் எவ்ளோ தான் பாதுகாப்பா இருக்க முடியும் சொல்லுங்க.. அட கோயிலுக்கு போயி நிம்மதியா சாமி கும்பிடலாம்னு வெளிய விட்டிருக்கிற செருப்பை எவனும் அடிச்சுட்டு போயிடாம இருக்கனும்ங்கிறது தான் முத வேண்டுதலா இருக்குது நிறையா பேருக்கு. இது பத்தி எங்கயோ எப்பவோ ஒரு 'ஹைக்கூ' படிச்சதா நினப்பு.. எங்க எப்ப என்னன்னு ஞாபகம் இல்லை.. மனசுகுள்ளார இருக்கிறத யாரு வந்து லவட்டிட்டு போறாங்கன்னு தெரியலை..

ஆனா, இங்க பாருங்க ஒருத்தர், வெளிய விடுற செருப்புக்கு எவ்ளோ பாதுகாப்பு வச்சிருக்காருன்னு..


நம்மாளுக எப்பவும் இந்த மாதிரி விசயத்துல எல்லாம் கெட்டிதான். :)


--
#192

6 comments:

இராம்/Raam said...

ராசா இதுக்கு சிரிக்கணுமா.எதுக்கும் ஸ்மைலி போட்டுறேன்..... :-)

Anonymous said...

ஓ, ஒரு ஜோடி செருப்பை லவட்டிக்கொண்டால் ஒரு பூட்டு இலவசமா ?

Sud Gopal said...

செருப்பு காணாமப் போக பூட்டு போட்டிடலாம்.
மனசு காணாமப் போக என்ன செய்ய???

(அய்யோ...கவிஜ..கவிஜ...)

Pavals said...

ராம் >> //இதுக்கு சிரிக்கணுமா.// இந்த கேள்விக்கு பதிலா அந்த .. வேண்டாம்.. எதுக்கு நம்மளே சொல்லிகிட்டு :)

அனானி >> சொன்னனே நம்மளுக எப்பவும் கெட்டின்னு.. :)

சுதர்சன் >> //மனசு காணாமப் போக என்ன செய்ய???// அந்த செருப்பையே எடுத்து.. :)

ILA (a) இளா said...

முதல்ல ஒரு ஸ்மைலி ;)போட்டுகிறேன், அப்புறமா சுதர்சன் எழுதுன கவிஜைக்கு ஒரு "ஓ", போட்டுக்கிறேன், அப்படியே அப்பீட்டு ஆகிக்கிறேன்

enRenRum-anbudan.BALA said...

ராசா,

SUPER :))))))))