Friday, May 18, 2007

களப்பணியாளர்

Field work செய்யறவங்களை 'களப்பணியாளர்'ன்னு சொல்லலாம்.. (நாங்கெல்லாம் பல தேர்தல்ல பல கட்சிகளுக்கு களப்பணி ஆற்றியிருக்கோம்)சரி.. அதுக்காக க்ரிக்கெட் Fielderகளப்பணியாளர்'ன்னு சொல்லாமா??

இன்னைக்கு காலையில முத பந்துல வாசிம்ஜாபர் 'இன்னாங்கடா நடக்குது இங்க'ன்னு சோகத்தோட வெளியபோன ஆட்டத்த 'ராஜ் டி.வி'யில பார்க்கும் போது காதுல விழுந்த ஒரு வர்ணனை

'அந்த பந்தை களப்பணியாளர் சரியாக கணித்து பிடித்தார்'..

சரிதானா??

--
#227

2 comments:

Anonymous said...

களத்தடுப்பாளர் என்பதெ சரியென்று நினைக்கிறேன்

களவாணி said...

"கோழி பிடிப்பான்"ன்றது சரியான வார்த்தையா இருக்கும். கோழியக் கூட பிடிச்சிரலாம், நம்மாளுக பந்த தடுக்கமாட்டானுவ.

"களப் பணியாளன்"னா மழை வந்தா களத்த (பிட்ச்ச) மூடுறதுக்கு கோணி கொண்டாருவான்ய்ங்களே அவைங்களாத்தான் இருக்கும். அவைங்க கூட பந்த கணிச்சு புடிக்கிறாய்ங்கப்பா.

"பந்து பொறுக்கி"ன்னு நம்ம ஃபீல்டர்களைக் கூப்பிடுவோம் அய்யோ வேண்டாம் அப்புறம் பவுண்டரிக்கு அந்த பக்கமா ஒக்கார்ந்துக்கிட்டு இருக்கு சின்னப் பயலுவ என்னிய கல்லால அடிப்பானுவ :)))